சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* மனிதன் இருக்கும் வரை ஆசை, துன்பம், பயம், துவேஷம் இருக்கும். இவற்றில் இருந்து விடுபடுவதே மோட்சம்.* முன்னோர்கள், தெய்வத்திற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. * யாகம் என்பது மந்திரம், தேவதை, ஹவிஸ் என்ற மூன்று வடிவமாக உள்ளது. மந்திரத்தை வாயால் சொல்லி, தேவதையை மனதால் தியானம் செய்து, ஹவிஸ் என்னும் திரவியத்தை பயன்படுத்தி செய்வதுதான் ஹோமம். * ருத்ரன் கண்ணிலிருந்து உண்டான ருத்ராட்சத்தை கோர்த்துச் செய்ததுதான் ருத்ராட்ச மாலை. இங்கு 'அக் ஷம்' என்றால் 'கண்' என்று பொருள். ருத்ராட்சத்திற்கு தமிழில் 'திருக்கண்மணி' என்ற பெயரும் உண்டு. * மோட்சம் என்பதை சைவர்கள் கைலாசம் என்றும், வைஷ்ணவர்கள் வைகுண்டம் என்றும் சொல்வர். இதனால்தான் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலும், வைகுண்டப்பெருமாள் கோயிலும் உள்ளது. இரண்டுமே சிற்ப விசேஷம் படைத்தவை. * சகுனம் என்பது வேறு. நிமித்தம் என்பது வேறு. நிமித்தம் என்பது வரப்போவதை ஏதோ ஒரு வகையில் அடையாளம் காட்டுவதற்குப் பொதுப் பெயர். அதில் ஒரு வகையே சகுனம். இதற்கு 'பக் ஷி' என்பது அர்த்தம். பறவைகளால் ஏற்படும் நிமித்தங்களுக்கு சகுனம் என்று பெயர்.