உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

பிப்.9 தை 26: தை அமாவாசை. திருவோண விரதம். திருவள்ளூர் வீரராகவர் காலை சூர்ணாபிஷேகம். மதுரை மீனாட்சியம்மன் வைரகிரீடம். திருநெல்வேலி, தென்காசி, சங்கரநயினார் கோயில் இத்தலங்களில் லட்ச தீபக்காட்சி. கல்லிடைக்குறிச்சி, திருமொச்சியூர், சூரியனார் கோயில் இத்தலங்களில் சிவபெருமான் பவனி.பிப்.10 தை 27: வேதாரண்யம் சிவபெருமான் பவனி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம். பிப்.11 தை 28: முகூர்த்த நாள். சந்திர தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். அப்பூதி நாயனார் குருபூஜை. பிப்.12 தை 29: திருமயம் ஆண்டாள் உச்சிக்கொண்ட கூடாரைவல்லி உற்ஸவம். திருவள்ளூர் வீரராகவர் தீர்த்தவாரி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை. அஹோபிலமடம் 6வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். பிப்.13 மாசி 1: விஷ்ணுபதி புண்ணியகாலம். முகுந்த, வரசதுர்த்தி விரதம். கோயம்புத்துார் கோனியம்மன் பூச்சாற்று விழா. திருப்பதி பெருமாள் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல். பிப்.14 மாசி 2: வஸந்த பஞ்சமி. திருச்செந்துார், பெருவயல் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். மதுரை கூடலழகர் ராஜாங்க சேவை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் புறப்பாடு. பிப்.15 மாசி 3: சஷ்டி விரதம். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள், திருத்தணி, காங்கேயம், திருப்போரூர் முருகப்பெருமான் மதுரை இம்மையிலும் நன்மை தருவார், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் இத்தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். திருவொற்றியூர், விருத்தாச்சலம் தலங்களில் சிவபெருமான் பவனி.