கேளுங்க சொல்கிறோம்
*நோயின்றி வாழ...எம்.கதிர்வேல், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச|ஜபேந்நாமத்ரயம் நித்யம் சர்வரோக நிவாரணம்||நோயின்றி வாழ இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி திருநீறு பூசுங்கள். *அனுக்ஞை விநாயகர் என்றால்...எம்.சிந்துஜா, கண்டமங்கலம், புதுச்சேரி. அனுக்ஞை என்றால் அனுமதி பெறுதல். யாகம், ஹோமம், திருவிழா கோயிலில் நடக்கும் முன் இவரிடம் அனுமதி பெறுவர். *ஸரிகமபதநி என்றால் என்ன?வி.சங்கர்,கோவில்பட்டி, துாத்துக்குடி.ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழும் சப்த ஸ்வரங்கள். இவற்றின் முதல் எழுத்துக்களே 'ஸரிகமபதநி'. இதுவே இசைக்கு ஆதாரம். *நம்பிக்கை துரோகியை சந்திக்க நேர்ந்தால்...ஆர்.கோமதி, பெரும்பாக்கம், சென்னை.புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள். அவரைக் கடவுள் கவனித்துக் கொள்வார். *குரோதி ஆண்டின் பலன் மோசமானதா?எஸ்.பாலவிநாயகம், அருவங்காடு, நீலகிரி.குரோதி என்ற பெயரைக் கண்டு பயப்படாதீர்கள். இந்த ஆண்டின் ராஜா செவ்வாய். அவருக்குரிய கடவுளான முருகனை வழிபட்டால் நன்மை சேரும். *மாசிக் கயிறு பாசி படியும் என்கிறார்களே...எம்.வனஜா, பசுமலை, மதுரை.எமனிடம் இருந்து கணவரைக் காத்தவள் சாவித்ரி. மாசி, பங்குனி இணையும் நேரத்தில் இவளை நினைத்து நோன்புக்கயிறு கட்டினால் சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். இதை விளக்குகிறது இந்த பழமொழி. *பயணிகள் இளைப்பாற நிழற்குடை அமைப்பது புண்ணியமா...பி.ரோகித், திருவட்டாறு, கன்னியாகுமரி.புண்ணியம். ஆனாலும் உங்கள் பெயரை அதில் விளம்பரம் செய்யாதீர். நிழற்குடை அமைத்தால் நெருப்பு, உஷ்ணம் தொடர்பான தீமை உங்களுக்கு வராது. *ராம நாம ஜபத்தில் பிரணவ மந்திரமான 'ஓம்' சேர்ப்பதில்லையே...கே.ஸ்ரீராம், சின்னமனுார், தேனி.ராம என ஜபித்தால் போதும். பிரணவ மந்திரம் இதில் அடங்கியுள்ளது. *திருமணத்தை 'கால்கட்டு' என்பது ஏன்? எம்.பிரீதி, அடகூர், மைசூரு.திருமண பந்தம் மனிதனை பொறுப்பானவனாக மாற்றும். மனப்பக்குவத்தை தரும். இதையே கால்கட்டு என்கின்றனர்.*பாலாலயம் செய்த கோயிலில் திருவிழா நடத்தலாமா?ஆர்.கற்பகம், நொய்டா, டில்லி.அந்தந்த கோயிலில் முன்னோர் வகுத்த நடைமுறையை பின்பற்றுங்கள். சில கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கு முன்பும் திருவிழா நடத்துவது உண்டு.