குழந்தைகள் படிப்பில் சிறக்க...
விநாயகர் முன் கீழ்கண்ட பாடல்களை பாடுங்கள். பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதி வர அருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை இறையே.-திருஞானசம்பந்தர்ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. -திருமூலர்விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து-கபிலர்எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள்முடிக்கடக்களிற்றை கருத்துள் இருத்துவாம். -தெய்வச்சேக்கிழார்பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் துாமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம், மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு-அவ்வையார்