உள்ளூர் செய்திகள்

நாக்குக்கு அடிமையாகாதே!

- வாரியார்* இறைவன் நமக்குச் செய்யும் அனைத்தும் அருள்தான். சிலசமயம் நமக்குத் துன்பம் போலத் தோன்றினாலும் அது நம் அறியாமையே காரணம். * ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல, கடினமான செயலை நிறைவேற்ற பலரின் உதவியைப் பெறவேண்டியிருக்கும். * யாரையும் "இவன் சிறியவன்' என்று அவமதிக்காதீர்கள். பிறரை அலட்சியம் செய்பவனை ஆண்டவனும் ஒரு பொருளாக மதிக்கமாட்டான்.* தன்னைத் தானே சோதித்துப் பழகுங்கள். அதனால், உங்களை தீமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பலம் பெறுவீர்கள்.* ஏழையை ஓங்கி அடித்தவன் மறுபிறவியில் கையொடிந்து முடமாவான். யாரையும் துன்புறுத்தி இன்பம் பெற நினைப்பது பெரும் பாவம்.* தெய்வ உணர்வு ஒன்று தான் மனிதனை விலங்கு நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. * எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. * நாக்குக்கு அடிமையாகாதே. கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே நல்லது. * பொறாமை, ஆசை, கோபம் ஆகிய தீயகுணங்கள் மனதை பலவீனப்படுத்துகின்றன. தியானப்பயிற்சியால் மனம் தூய்மை பெறும்.