படைவீடு இவருக்கு உண்டா...
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
தம்பி முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல அண்ணன் விநாயகருக்கு ஆறுபடை வீடு உள்ளது. 1. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 'அல்லல் போக்கும் விநாயகர்'.2. விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோயிலில் உள்ள 'ஆழத்து விநாயகர்'. 3. மயிலாடுதுறை திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள 'கள்ளவாரண விநாயகர்'.4. மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள 'சித்தி விநாயகர்'.5. பிள்ளையார்பட்டி 'கற்பக விநாயகர்'.6. சிதம்பரம் அருகேயுள்ள திருநாரையூர் 'பொள்ளாப்பிள்ளையார்'.