உள்ளூர் செய்திகள்

ஆரோக்கிய மந்திரம்!

நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும்.''ஜபாகு சும சங்காஸம்காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம்ப்ரண தோஸ்மி திவாகரம்''பொருள்: காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை சுட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.