உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

1. திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள்....... பாஞ்சராத்ரம், வைகானசம் 2. மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர்..... ராஜாஜி 3. இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணம்....... ராமசரித மானஸ் 4. ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது....... பெருமாள் திருமொழி 5. திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள்..... திருவோணம், ரோகிணி 6. எத்திசை நோக்கி நின்று திருநீறு பூசவேண்டும்? கிழக்கு, வடக்கு 7. ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று பாடிய தலம்.... மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 8. விபூதி என்பதன் பொருள்........ மேலான செல்வம் 9. 'தாசமார்க்கம்'என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர்.... திருநாவுக்கரசர் 10. அக்னியைப் பற்றிக் கூறும் நூல்....... ஆக்னேய புராணம்