கேளுங்க சொல்கிறோம்!
* சிவன் சொத்து குல நாசம் என்கிறார்களே...ஏன்?கு.ராமசாமி, திருக்கோவிலுார்.கோயில் சொத்தை அபகரிப்பது அதர்மம். சிவபூஜை முறையாக நடக்காவிட்டால், நாட்டில் மழை வளம் குறையும். திருமூலர், திருவள்ளுவர் போன்றவர்களும் இதை குறிப்பிட்டு உள்ளனர். சந்ததியும் பாதிக்கும் என்பதையே 'சிவன் சொத்து குலநாசம்' என்றனர். கோயில் சொத்தை அபகரிக்க துணை நிற்பதோ, வேடிக்கை பார்ப்பதோ கூடாது. * இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடு இருப்பது ஏன்?கே.முத்துாஸ், திருவாடானை.நம் நல்வாழ்வுக்கு மதம் வழி காட்டுகிறது. கணவன், மனைவி, பிள்ளைகள் என குடும்பமாக வாழும் முறையை தெய்வங்களே, நமக்கு எடுத்து காட்டியுள்ளனர்.வாழ்வின்தேவை, கடமை, விருப்பம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வம் என்ற அடிப்படையில், தெய்வ வழிபாடு பல உருவானது.பூஜைக்காக உடைத்த தேங்காயில், பூ வந்தால் அபசகுனமா?ச.ஜான்ரவி, கோவில்பட்டி.இது சுப சகுனம் நல்லதை சிந்தித்தால் இறையருளால் எல்லாம் நல்லதாக அமையும். பிள்ளையார் சிலையை திருடி, வழிபட்டால் நல்லது என்பது உண்மையா?அ. பேச்சியப்பன், ராஜபாளையம்.கொடிய செயலான திருட்டால் தீமை உண்டாகும். கோயிலில் சிலை திருடு போனால், பரிகார பூஜை நடத்த வேண்டும்.அபிஷேக தீர்த்தம் வரும் இடத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளதே... ஏன்?கே.ஏ.ஈஸ்வரி, மதுரை.ஆகம சாஸ்திர அடிப்படையில், தீர்த்தம் விழுவதற்கு சற்று தள்ளி, வட கிழக்கில் சண்டிகேஸ்வரர் சன்னதி அமைக்கப்பட வேண்டும். காகம் தலையில் அடித்ததற்கு பரிகாரம் உண்டா?டி.கே.சுகுமார், குனியமுத்துார்.தலைக்கு குளித்து, சனீஸ்வரர் சன்னதியில் எள் தீபம் ஏற்றுவது பரிகாரம்.