கேளுங்க சொல்கிறோம்!
* வீட்டில் திருவிளக்கு பூஜையை நடத்தலாமா?எஸ். சியாமினி, புதுச்சேரிதாராளமாக நடத்தலாம். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். உறவினர்களுடன் சேர்ந்து நடத்தினால் ஒற்றுமைக்கான வாய்ப்பும் உண்டாகும். * தங்க சங்கிலியில் தாலி அணியலாமா?ராஜீவ்குமார், சென்னை'மாங்கல்ய தந்துனானேன' என்ற மந்திரம் சொல்லி திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது. 'தந்து' என்றாலும் 'ஸூத்ரம்' என்றாலும் மஞ்சள் கயிறை குறிக்கும். 'மாங்கல்ய சூத்திரம்' என்பதற்கு 'தாலிக்கயிறு' என்பது பொருள். தங்க சங்கிலியில் அணிவதால் தவறில்லை. அதனுடன் மஞ்சள் கயிறும் சேர்ந்தால் மங்களகரமாக இருக்கும்.சுப நிகழ்ச்சிகளில் நலுங்கு வைப்பது ஏன்?ஆர்.சரோஜினி, அச்சிறுப்பாக்கம்நலுங்கு என்பது திருமணத்தில் நடத்தப்படும் மங்கல சடங்கு. இதில் சிறுசிறு விளையாட்டுகளில் மணமக்கள் பங்கேற்பர். வெற்றி, தோல்வியை கடந்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள உதவும் பயிற்சியாகவும், அதே சமயத்தில் மகிழ்ச்சிக்காகவும் நலுங்கு நடக்கிறது.சுவாமி சிலைகளை பஞ்சலோகத்தில் செய்ய காரணம் என்ன?எஸ்.நிஷா, மதுரைஎங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தியை ஈர்த்து, ஓரிடத்தில் நிலை நிறுத்தும் சாதனம் சிலைகள். செம்புக் கம்பி மின்சாரத்தை கடத்துவது போல, பஞ்சலோக சிலைகள் தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டதால் இப்படி செய்யப்படுகிறது.அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்னும் போது பிறவா வரம் வேண்டுவது ஏன்?எஸ்.காந்தி, மதுரைஅரிதான மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். பாவம் செய்து மறுபிறவியில் கீழான நிலை அடைவது கூடாது. வீடுபேறு என்னும் இறைவன் திருவடியை அடைய முயற்சிக்க வேண்டும். இதை 'பிறவா வரம்' என குறிப்பிடுவர். 'உன்னை வழிபடுவதை தவிர வேறேதும் மனித பிறவியின் நோக்கமில்லை' என்று திருநாவுக்கரசரும், 'இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவைப் பெறினும் வேண்டேன்' என்று தொண்டரடி பொடியாழ்வாரும் பாடியுள்ளதை இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.