கேளுங்க சொல்கிறோம்!
* நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும்?பி.சி.ரகு, விழுப்புரம்பிறரது விஷயத்தில் தலையிடுவது, மற்றவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவது, தற்பெருமையால் தம்பட்டம் அடிப்பது, தாழ்வு மனப்பான்மையால் வருந்துவது போன்றவைகளை விட்டு, ''இறைவன் அருளிய வாழ்க்கையை இன்பமாக வாழ்வோம்'' என்ற எண்ணம் இருந்தாலே நிம்மதி தான்!கோமடி சங்கின் சிறப்பு என்ன?ஆர்.ஜெயபாரதி, சாத்துார்இயற்கையாக விளைந்த சங்கு பார்ப்பதற்கு பசுவின் மடி போல இருப்பதால் 'கோமடி சங்கு' எனப்படும். பசு தானாகவே சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்ததாக வரலாறு உண்டு. அப்பசுவைப் போல கோமடி சங்கால் அபிஷேகம் செய்வதும் புனிதமானதாகும்.கோயில் வழிபாட்டுடன் குளத்தை இணைந்திருப்பது ஏன்?ஆர்.விசாலாட்சி, உள்ளகரம்ஒவ்வொரு கோயிலுக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயம் இருக்கும். மூர்த்தி என்றால் கருவறையிலுள்ள சுவாமி. தீர்த்தம் என்பது திருக்குளம். தலம் என்பது தலவிருட்சம். சுவாமி போலவே மற்ற இரண்டும் சிறப்பு மிக்கவை தான். மந்திரிக்க வேப்பிலை, மயிலிறகு - எது சிறந்தது?கே.ஆர்.சுந்தரம், மதுரைவேப்பிலை மிகச் சிறந்தது. இஸ்லாம், ஜெயின் சமயத்தினர் மந்திரிக்க மயிலிறகை பயன்படுத்துவர். தமிழர்களும் மயிலிறகை பயன்படுத்துகின்றனர். குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதுவது அவசியமா, ஏன்?பா.குழந்தைவேல், திருப்பூர்இல்லை. ஒரு வயது முடிந்த பிறகு ஜாதகம் கணிக்கலாம். எதிர்கால நடப்பை அறிந்து அதன்படி வாழ்வை அமைக்க ஜாதகம் தேவை.* சன்னதியில் பச்சிளங்குழந்தை சிறுநீர் கழித்தால் பரிகாரம் என்ன?எஸ்.சுசீலாதேவி, திருவொற்றியூர்குழந்தையும் தெய்வமும் ஒன்றே. அவர்கள் சிறுநீர் கழித்தால் தோஷமாகாது. பரிகாரமாக சன்னதியை துாய்மைப்படுத்தினால் போதும்.விபூதி, குங்குமத்தை கோயில் துாணில் வைப்பது சரிதானா...ம.அபிராமி, திருப்பூர்கடவுளின் பிரதிநிதியான அர்ச்சகரால் வழங்கப்படும் பிரசாதம் இது. நெற்றியில் இட்டது போக மீதியை குடும்பத்தினருக்காக எடுத்துச் செல்ல வேண்டும். துாணில் வைப்பது கடவுளையே அவமதிக்கும் செயல். இதனால் கோயில் மாசுபடும். எவர்சில்வர் கிண்ணங்கள் கோயிலில் இருக்கும். அதை பயன்படுத்துவது அவசியம்.கோயிலைச் சுற்றும் முறை பற்றி, சாஸ்திரம் என்ன சொல்கிறது?இரா.மனகாவலன், சென்னைநடந்து வலம் வருதல், பிரதோஷ காலத்தில் சோம சூத்திர பிரதட்சிணம் வருதல், அங்கப்பிரதட்சிணம் செய்தல் என மூன்று விதமாக சுற்றி வரலாம். ஒருமுறை அங்கப்பிரதட்சிணம் செய்வது, ஆயிரம் முறை நடந்து வலம் வருதலுக்கு சமமான புண்ணியம் தரும்.