உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* கும்பாபிஷேகத்தை 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது ஏன்?டி.சாருலதா, கடலுார்சுவாமி சிலைகளின் கீழ் சாத்தப்படும் அஷ்டபந்தன மருந்து, கோபுரக் கலசங்களில் இருக்கும் தானியங்கள் 12 ஆண்டுகள் ஆற்றலோடு இருக்கும். இவற்றை மாற்றவும், கோயிலை புதுப்பிக்கவும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காலவரையறை செய்துள்ளனர்.கோபுரக் கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன்?எம்.தருண், திருப்பூர்வரகு என்னும் சிறு தானியத்தை கலசத்தில் நிரப்புவர். தங்கம், வெள்ளி, தாமிரத்தால் ஆன கலசத்தில் தானியம் சேரும் போது அது தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இடி, மின்னல் போன்ற அபாயத்தில் இருந்தும் காக்கும் சக்தி இதற்கு உண்டு. * கணவன், மனைவி சண்டையின்றி வாழ வழி சொல்லுங்கள்.கே.அவந்திகா, மதுரைஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால், புரிதல் ஏற்படும். பின் எப்போதும் மகிழ்ச்சி தானே? பரிகாரம் செய்ய விரும்பினால், வெள்ளிதோறும் சுவாமி, அம்மன் சன்னதியில் தீபமேற்றுங்கள். * திருவிழாவில் உற்ஸவருக்கு இருபுறமும் தீவட்டி ஏன்?கே.மித்ரா, சென்னைசுவாமி பவனி வரும் போது, அவரை உபசரிப்பதை 'ராஜ உபசாரம்' என சொல்வர். குடை, தீவட்டி, மேளம், இசை பாட்டு, பக்தர்களின் சரண கோஷத்தோடு சுவாமி வரும் போது, அவரது அருளால் எங்கும் சுபிட்சம் உண்டாகும். திருமணம் தடையின்றி நிறைவேற பரிகாரம் கூறுங்கள்.சி.சிவரஞ்சனி, தேனிகுறிப்பிட்டவரின் பிறந்த ஜாதகத்தில் ஜோதிட ரீதியாக தோஷம் உள்ளதா என அறிந்து பரிகாரம் செய்யுங்கள். பொதுவாக தடை நீங்கி திருமணம் நடக்க வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபடுவது நல்லது. அப்போது அம்மனுக்கு அரளி மாலை சாத்துவது, எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறப்பு.* பிரணவ மந்திரமான ஓம் என்பதன் சிறப்பு என்ன?எஸ்.அவினாஷ், கோவைவேதத்தை வெளிப்படுத்தும்போது கடவுள் முதலில் உச்சரித்த ஒலி நாதமே 'ஓம்' என்னும் பிரணவம். அனைத்து வேதங்களும் இதில் அடங்கியுள்ளது. பிரணவத்தின் விரிவாக்கமே வேதம் என்கிறது திருவிளையாடல் புராணம். எந்த மந்திரத்தை சொன்னாலும்,' ஓம்' எனச் சொல்லியே ஜபிப்பர். பிராணாயாமப் பயிற்சியின் போது இதை உச்சரிக்க கொடிய நோயும் தீரும். கையில் அகல் ஏந்திய பாவை விளக்கை வீட்டில் ஏற்றலாமா?கே.சோனா, புதுச்சேரிதாராளமாக! பூஜையறை விசாலாமாக இருக்கும் வீட்டில் இரண்டு விளக்காக ஏற்றலாம்.