உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* வெள்ளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்குமா?டி.பூமதிஸ்ரீ, தேனி'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...' என்பது பழமொழி. பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்தது போல, உப்பும் கடலில் விளைகிறது. வெள்ளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். புது வீட்டுக்கு கொண்டு செல்லும் பொருட்களில் உப்புக்கே முதலிடம்.* கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தி உள்ளதே...?பி.சவித்ரா, சென்னைபெரிய கோயில்களில் ஐந்து நந்திகள் இருக்கும். மூலவருக்கு அருகில் இருப்பது கைலாச நந்தி. அடுத்து இருப்பது விஷ்ணு நந்தி. மூன்றாவதாக நின்ற கோலத்தில் இருப்பது அதிகார நந்தி. நான்காவது சாமான்ய நந்தி. ஐந்தாவது மகாநந்தி. இவற்றில் மகாநந்திக்கே பிரதோஷ நாளில் அபிஷேகம் நடக்கும்.* கோயில் சுவரில் வெள்ளை, காவி வண்ணம் பூசுவது ஏன்?என்.விஷ்வா, கோவைவெள்ளை அமைதியையும், காவி தெய்வ அருளையும் குறிக்கும். அமைதியின் இருப்பிடமான கோயில்களில், அருளே வடிவான தெய்வங்கள் இருப்பதன் அடையாளமாக வெள்ளை, காவி வண்ணம் பூசுகின்றனர். * உடல் துாய்மை, மனத்துாய்மை வழிபாட்டுக்கு தேவையானது?எம்.ஹரி வர்ஷன், நெய்வேலிகடவுளை வழிபடும் தகுதி துாய மனதிற்கு மட்டும் உண்டு. கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்று அது போல உடல், மனதின் துாய்மை காப்பது கடவுளின் அருள் பெறவே.பணம் இல்லாததால் நேர்த்திக்கடன் செலுத்தவில்லை. இதனால் தெய்வ குற்றம் ஆகுமா?டி.ஜெய் கிருஷ், ஊட்டிபணம் இல்லாததால் நேர்த்திக்கடனை தாமதமப்படுத்துவதில் தவறில்லை. தெய்வ குற்றமும் உண்டாகாது. நேர்த்திக்கடனை செலுத்தும் வாய்ப்பு கைகூட கடவுளை தினமும் வேண்டுங்கள். வரவேற்பு அறையில் பாத்திரத்தில் நீரூற்றி பூக்களை மிதக்க விடுவது...ஏன்?என்.ஹரின்யா, திருவள்ளூர்வாஸ்து குறைபாடு நீங்கவும், செல்வம் பெருகவும் இதை சீனர்கள் பரிகாரமாக செய்கின்றனர். இப்போது நம் நாட்டிலும் இந்த பழக்கம் வந்து விட்டது.சுவாமிசிலையை பிரதிஷ்டை செய்யும் போது மருந்து சாத்துவது ஏன்?எஸ்.கிருத்திக் ஸ்ரீராம், திருத்தணிஎட்டு மூலிகைகள் ஆன மருந்தினை அஷ்டபந்தனம் என்பர். சுவாமி சிலையை, பீடத்துடன் இணைக்கும் இந்த மருந்து தெய்வீகம் நிறைந்தது. இதில் குறை நேர்ந்தால் கும்பாபிஷேகம் பலனற்றுப் போகும். சாத்திய மருந்து இல்லாமல் போனால் நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்குண்டாகும். இந்நிலையில் நாள், நட்சத்திரம் கூட பார்க்காமல் புதிதாக மருந்து சாத்தி கும்பாபிஷேகம் நடத்துவர். சனி என்றாலே பலருக்கும் குலை நடுங்குகிறதே......ஏன்?எல்.ஷைனிகா, விழுப்புரம்ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டு எடுத்துக் கொள்கிறது சனி. மேலும் நமது ராசிக்கு முன்னுள்ள ராசியில் இரண்டரை ஆண்டு, பின்னுள்ள ராசியில் இரண்டரை ஆண்டு என மொத்தம் ஏழரை ஆண்டு சனியின் கட்டுப்பாட்டில் ஒரு மனிதன் இருக்க வேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் துன்பம் ஏற்படுவதற்கு முற்பிறவிகளில் செய்த பாவங்களே காரணம். இதை உணர்ந்தால் பாவம் செய்யும் எண்ணம் மறையும். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரரை தரிசிப்பது நல்லது. பிராண பிரதிஷ்டை என்பதன் பொருள் என்ன? எம்.கிருபானந்தன், புதுச்சேரி. பிராணன் என்பதற்கு 'உயிர்' என்பது பொருள். பிறப்பதும், இறப்பதுமாகிய உயிர்களுக்கு இந்த பொருள் பொருந்தும். பிறப்பு, இறப்பு அற்றவர் கடவுள். குறிப்பிட்ட தெய்வத்தை கும்பத்தில் வழிபடும் முன், அதன் சக்தியை கும்பத்திலோ அல்லது பிம்பத்திலோ அதற்குரிய பீஜாக்ஷர மந்திரம் சொல்லி நிலைநிறுத்துவது பிராண பிரதிஷ்டை. நமக்கு உயிர் போல தெய்வத்திற்கு உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் மந்திரம் முக்கியம். பிராணன்- மந்திரம், பிரதிஷ்டை- நிலைநிறுத்துதல் என்பதே பிராண பிரதிஷ்டை. முதல் நட்சத்திர பிறந்த நாளில் அமாவாசை வந்தால் ஆயுஷ் ஹோமம் நடத்தலாமா?சி.அஷ்வத் விநாயக், காஞ்சிபுரம் முதல் பிறந்த நாளை அப்தபூர்த்தி என்றும், அறுபதாவது பிறந்தநாளை சஷ்டி அப்தபூர்த்தி என்றும் சொல்வர். இந்த இரண்டையும் பிறந்த நட்சத்திரத்தன்று தான் செய்ய வேண்டும். அமாவாசைக்கும், பிறந்த நாளுக்கும் சம்பந்தம் இல்லை.சிவன்கோயில் விபூதியை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாதாமே...?ஏ.ஆர்.ஜம்புலிங்கம், ஸ்ரீபெரும்புதுார்.விபூதியை ஐஸ்வர்யம் என்றும் அழைப்பர். விபூதி செல்வ வளம் தர வல்லது. இதை குடும்பத்தினருக்கு கொடுத்து, மீதியை வீட்டு பூஜையறையில் வைத்தால் நன்மை பெருகும்.சனீஸ்வரருக்கு இரும்பு அகலில் விளக்கு ஏற்றலாமா?கே.மிதுன் சாய், உளுந்துார்பேட்டைஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி உலோகம் இருக்கிறது. இதில் சனீஸ்வரருக்கு உகந்தது இரும்பு. இரும்பு அகலில் தீபம் ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும். சஷ்டியப்த பூர்த்தியன்று இரும்பு சட்டியில் நெய் விட்டு தானம் அளிப்பது இதன் அடிப்படையில் தான்.