கேளுங்க சொல்கிறோம்!
* குழந்தைக்கு காதணி விழா நடத்துவது ஏன்?கே.ஐஸ்வர்யா, திருப்பூர்காதில் துளையிட்டு அதில் தோடு அணிவதே காதணி விழா. ஆபரணத்தின் மூலமாக சூரியசக்தி உடலுக்குள் பரவி நன்மை செய்கிறது. இதற்கு முன்னதாக முடிக்காணிக்கை செலுத்துவதன் மூலம் குலதெய்வ அருளை குழந்தை பெறுகிறது.* பிதுர் சாபம் தீர பரிகாரம் சொல்லுங்கள்சி.சாய்நிவாஸ், விழுப்புரம்முன்னோருக்கு அமாவாசை தர்ப்பணம், சிராத்தம் செய்யாவிட்டால் பிதுர் சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதற்காக ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு போன்ற திருத்தலங்களில் பரிகாரம் செய்யலாம். பின்னர் ஆண்டு தோறும் தர்ப்பணம், திதி செய்வது அவசியம்.* பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?எம்.ஹேமா, சென்னைருத்ராட்சம் அணிய ஆண், பெண் பாகுபாடு, வயது தடையில்லை. ஆனால் தீட்டுக் காலங்களில் அணிவது கூடாது.* சுந்தர காண்டம் படித்தால் என்ன கிடைக்கும்?பி.கேசவன், மதுரைராமனின் பிரிவைத் தாங்காமல் சீதை உயிரை மாய்க்கவும் துணிந்தாள். சீதையின் துன்பம் போக்கும் விதத்தில் கணையாழியை அளித்த அனுமன், இலங்கைக்கு ராமன் வரவிருக்கும் நற்செய்தியைத் தெரிவித்தார். ராமாயணத்தில் உள்ள இந்த சுந்தர காண்டத்தை படித்தால் துன்பத்தை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கும். நற்செய்தி தேடி வரும். முருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா, கார்த்திகையா?ஜி.அஸ்வின், திருத்தணிவைகாசி விசாகத்தில் அவதரித்தவர் முருகன். கார்த்திகைப்பெண்கள் என்னும் ஆறுபேரால் வளர்க்கப்பட்டார். பிறந்த நட்சத்திரத்தை விட, வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கார்த்திகை அவருக்குரியதாகி விட்டதால் பக்தர்கள் விரதம் இருப்பர்.கடவுளை விட அவரது திருநாமத்திற்கு முக்கியத்துவம் ஏன்?எல்.சந்துரு, ஊட்டிகலியுகத்தில் கடவுளை நேரில் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு கிடையாது. அவரது திருநாமத்தை ஜபிக்கும் ஆற்றல் நாக்கிற்கு உள்ளது. நம் அளவில் எது முடியுமோ அது சிறப்பானது தானே!