கேளுங்க சொல்கிறோம்
* கண் நோய் தீர அம்மனுக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?பி.கேதார், விழுப்புரம்வெள்ளியால் செய்த கண்மலரை மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வையுங்கள். கண்மலர், காணிக்கையை கோயிலில் செலுத்தி விட்டு மாவிளக்கு ஏற்றுங்கள். * முருகனை பிரம்மச்சாரி என்கிறார்களே உண்மையா? எஸ்.சாத்விகா, திருப்பூர்பிரம்மச்சாரியான முருகன் அசுரவதம் முடித்த பின்னர் தெய்வானை, வள்ளியை திருமணம் செய்தார். திருப்பரங்குன்றம், திருத்தணியில் தெய்வானை, வள்ளி கல்யாணம் சிறப்பாக நடக்கும். சுப்ரமணிய ஷோடச நாமாவளியில் 'ஓம் ப்ரம்மசாரிணே நம:' என்ற மந்திரம் உண்டு. இதனை பிரம்ம சாஸ்தா என்பர். பிரணவ மந்திரத்தின் விளக்கம் தெரியாத பிரம்மனைத் தண்டித்தவர் என்பது பொருள். * ஓம் நமசிவாய ஜபித்தால் என்ன நன்மை?சி.சாய்கார்த்திக், மதுரைஒருவரிடம் உயர்ந்த ரத்தினம் இருந்தால் அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகுவது போல நமசிவாய மந்திரத்தை ஜபிப்பதால் நன்மை கிடைக்கும்.பழம், காய்கறி, ரூபாயால் சுவாமியை அலங்கரிப்பது ஏன்?எல்.அவந்திகா, சிவகங்கைஎல்லா உயிர்களுக்கும் உணவு அளிப்பவர் கடவுள். ஆனி பவுர்ணமியில் பழம், காய்கறிகளால் அலங்காரம் செய்து நன்றி செலுத்துகிறோம். தங்க நாணயம் வாங்க பயன்படும் ரூபாய் நோட்டை பொன்மலராக கருதி அலங்கரிக்கிறோம்.* பூட்டிய கோயிலில் வெளியே நின்று வழிபடலாமா?கே.ஷிவானி, சென்னைகோயில் சன்னதியில் திரை, கதவு சாத்தியிருந்தாலும் வழிபாடு செய்யக் கூடாது. ஆனால் பூட்டிய கோயில் வழியாக செல்ல நேரிட்டால் நின்று கோபுரத்தை வழிபடுவது சிறப்பு. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். லட்சார்ச்சனை என்றால் என்ன?எம்.வினித், கோவைகடவுளின் திருநாமத்தை நுாற்றெட்டு முறை சொல்வது அஷ்டோத்திரம். ஆயிரம் முறை சொல்வது சகஸ்ரநாமம். சகஸ்ர நாமத்தை நுாறுமுறை சொன்னால் லட்சம் கணக்கு வரும். இதுவே லட்சார்ச்சனை. ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் உலகிற்கு நன்மை உண்டாகும்பக்தர்களை சிவபெருமான் ஆட்கொண்டதாகச் சொல்கிறார்களே?கே.ராகவ், திருவள்ளூர்அடியவர்களை வழிநடத்தி காப்பது ஆட்கொள்ளுதல். ஒரு விஷயத்தை சரியென்று கருதி ஈடுபடும்போது அதை வேண்டாம் என தடுத்துக் காப்பதை 'தடுத்தாட்கொள்ளுதல்' என்பர். பசியால் அழுத திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டி சிவன் ஆட்கொண்டார். சுந்தரரின் திருமணத்தின் போது முதியவர் வேடத்தில் வந்து 'இவன் எனது அடிமை' என ஓலையைக் காட்டி தடுத்தாட்கொண்டார்.தெரிந்தே தவறு செய்து விட்டு அம்மனுக்கு விரதம் இருந்தால் பாவம் தீருமா?கே.ரேஷ்மா,கள்ளக்குறிச்சிஉண்மையிலேயே மனம் வருந்தி அம்மனிடம் சரணடைந்தால் விரதம் பலன் தரும். ஏமாற்றும் எண்ணத்தோடு செய்தால் பூஜ்யம் தான்.