உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ஆர்.பவித்ரா, பெங்களூரு *பஞ்ச புராணம் என்றால் என்ன?பூஜையின் போது அர்ச்சகர்கள் மந்திரம் ஜபித்ததும், ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகளைப் பாடுவர். அப்போது தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் ஒரு பாடல் வீதம் பாடுவதை பஞ்ச புராணம் என்பர். டி.அமுதா, நெய்வேலி*விளக்கு வைத்த பிறகு துணி தைப்பது, துவைப்பது கூடாதா...கூடாது. மாலையில் விளக்கேற்றி (5:30 - 7:30 மணி) வழிபாட்டில் ஈடுபடுங்கள். ஏ.சாவித்ரி, கோவை*மயூரபந்தம் என்பதன் பொருள் என்ன?யாப்பு இலக்கணத்தின்படி பாடல் அடிகளை குறிப்பிட்ட வடிவில் புலவர்கள் இயற்றுவர். இதில் மயில் வடிவில் இயற்றுவது மயூர பந்தம். ஏ.ராஜேஷ், சென்னை*என் மகள் நாகதோஷத்தால் சிரமப்படுகிறாள். பரிகாரம் கூறுங்கள். ஞாயிறன்று ராகு காலமான மாலை 4:30 - 6:00 மணி அல்லது செவ்வாயன்று மதியம் 3:00 - 4:30 மணிக்குள் துர்கையை வழிபடுங்கள். எம்.வள்ளி, திருப்போரூர்*கலி முற்றிப் போச்சு என்கிறார்களே...கலிகாலத்தின் இயல்பு பற்றி தர்ம சாஸ்திரம் சொல்கிறது... * கெட்ட வழியில் பணம் சம்பாதிப்பர். * நல்லவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாவர். * பருவ காலத்தில் மழை பெய்யாது. * மழை இல்லாமல் நீர்நிலைகள் வற்றவும் செய்யும்.இதுதான் கலிகாலத்தின் இயல்பு.கே.வனஜா, திருநெல்வேலி*கோயிலில் பக்தர்கள் தரும் உணவை வாங்கக் கூடாதாமே?வாங்கலாம். பிரசாதம் என்ற நம்பிக்கையுடன் சாப்பிடுங்கள். எதிர்மறை எண்ணத்தை கைவிடுங்கள். நல்லதே நடக்கும்.வி.நந்தினி, கன்னியாகுமரி *வீட்டில் நவக்கிரக படம் வைத்து வழிபடலாமா?வழிபடலாம். நவக்கிரக ஸ்லோகம் மட்டும் சொல்லலாம். மற்ற பரிகாரங்களை கோயிலில் செய்யுங்கள்.ஆர்.கலாவதி, பரமக்குடி*சுதர்சன ேஹாமம் நடத்துவது ஏன்? மகாவிஷ்ணுவின் கையில் உள்ளது சுதர்சனம். இதற்கான ேஹாமம் நடத்தினால் எதிரி தொல்லை, நோய், மனக்குழப்பம், திருஷ்டி மறையும். வீடு அல்லது கோயில் மற்ற இடங்களில் நடக்கும் போது பங்கேற்றால் பலன் உண்டு.எல்.மலர், கடலுார்*வரலட்சுமி விரதமிருக்க மாமியார் அனுமதி பெற வேண்டுமாஅனுமதி பெற்று செய்வது குடும்பத்திற்கு நல்லது.