உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

சி.சிதம்பரம், பெங்களூரு* பெயரில் மாற்றம் செய்தால் வாழ்வில் ஏற்றம் ஏற்படுமா?பெயரில் எழுத்தை மாற்றினால் தலையெழுத்தை மாற்ற முடியுமா? முடியாது. 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்கிறார் திருவள்ளுவர். முயற்சிக்கு ஏற்ப விதியின் தாக்கம் குறையும். வெ.ராஜேஸ்வரி, சென்னை* பொறாமை கொண்டவர்கள் என்னை விட்டு விலக என்ன செய்யலாம்?நீங்கள்தான் விலக வேண்டும். ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபடுங்கள். பி.முனியசாமி, திண்டுக்கல்* சுவாமிக்கு எருமைப்பால் அபிஷேகம் செய்யலாமா?பசும்பாலைத் தவிர மற்ற பாலால் அபிஷேகம் செய்யக்கூடாது. டி.கே.சுகுமார், கோயம்புத்துார்* சுமங்கலிகள் வெள்ளைச்சேலை அணிந்தால் அபசகுனமா?இல்லை. சேலையில் கரை(கலர் பார்டர்) இருந்தால் போதும். சரஸ்வதிக்குரியது வெண்ணிற ஆடை. இதற்காக கவலைப்பட வேண்டாம். கே.எஸ்.மோகன்ராம், கூடலுார், தேனி* ராகுகாலம், எமகண்டம் தவிர்த்த மற்ற நேரங்களில் நல்ல விஷயங்களைச் செய்யலாமா?செய்யலாம். ஆனால் அன்று உங்கள் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது. எஸ்.சிவகுமார், புதுச்சேரி* பிரான்சில் உள்ள என் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜாதகம் எப்படி கணிப்பது?ஒவ்வொரு நாட்டிற்கும் சூரிய உதயம் மாறுபடும். அதன்படியே கிரகங்களின் நிலையும் அமையும். வெளிநாடுகளுக்காக ஜோதிடர்கள் தனி பஞ்சாங்கம் வெளியிடுகிறார்கள். அதைக் கொண்டு ஜாதகம் கணியுங்கள்.க.நடராஜன், தென்காசி* என் மனைவி காலமாகி நான்கு மாதமாகி விட்டது. எப்போது கோயிலுக்குச் செல்லலாம்?பதினாறாம் நாள் காரியத்தை முடித்த மறுநாளில் இருந்து கொடிமரம் இல்லாத கோயிலுக்குச் செல்லலாம். கொடிமரம் உள்ள கோயில்கள், குலதெய்வம், மலை, கடல் தலங்களுக்கு ஓராண்டுக்குச் செல்ல வேண்டாம்.கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு* புலன்களை அடக்க என்ன செய்ய வேண்டும்?எண்ணம், சொல், செயலால் நல்லதைச் செய்யுங்கள். எதற்கும் கோபப்படாமல் அமைதியாக இருங்கள். கோயில் வழிபாட்டால் மனம், புலன்கள் உங்கள் வசமாகும். ஆர்.வனிதா, திருப்பூர்* கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது ஏன்?குளத்தில் இடக் கூடாது. கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினால் போதும். இதனால் தோல் நோய்கள் குணமாகும்.