உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.லட்சுமி நாராயணன். வாழவல்லான், துாத்துக்குடி. *விளக்குபூஜையில் ஐந்துமுக தீபம் ஏற்றலாமா?ஐந்துமுக தீபம் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். திருமணத்தடை விலகும். கே.கீதா, காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு.*கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றலாமா?விளக்கேற்ற வேண்டாம். நெய், நல்லெண்ணெய், இலுப்பை, விளக்கெண்ணெய் மட்டும் பயன்படுத்தலாம். ம.வைசாலினி, பெங்களூரு.*கொலுவில் வைத்த பொம்மைகள் நகரும் என்கிறார்களே உண்மையா?உண்மையில்லை. இப்படியெல்லாம் சொல்லி பிறரை பயமுறுத்தாதீர்கள். எம்.நாகஜோதி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.*வீட்டிலுள்ள சுவாமிக்கு மயில் தோகையால் வீசலாமா?வீசலாம். இதை அலங்காரமாகவும் பயன்படுத்தலாம். கு.தங்கத்துரை, குளச்சல் கன்னியாகுமரி.*கோயில் கருவறையில் மின்விளக்கு இருக்கலாமா?மரபுகளை மீறி மின்விளக்குகளை அமைப்பது சரியல்ல. சரவிளக்குகளின் ஒளியில் சுவாமியை காண்பதே மகிழ்ச்சியளிக்கும். என்.லட்சுமி, தமிழர் என்கிலேவ், டில்லி.*கோயில் வழிபாட்டிற்கு வீட்டில் நைவேத்யம் தயாரிக்கலாமா?தயாரிக்கக் கூடாது. மடப்பள்ளி இல்லையெனில், அர்ச்சகர் வீட்டில் தயாரிக்கலாம்.ஆர்.ராஜாமணி, பூவரசன்குப்பம், விழுப்புரம்.*எதிரி தொல்லை, செய்வினை, கிரகதோஷம் போக்க யாரை வழிபடலாம்?சரபேஸ்வரர்(சிவன்), சக்கரத்தாழ்வாரை (விஷ்ணு) வழிபடலாம். இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர். *தலையெழுத்தை மாற்றவே முடியாதா...முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியத்தால் இப்பிறவி அமைகிறது. இதையே தலைவிதி என்பர். 'முருகப்பெருமானின் திருவடி பட்டதால் என் தலையெழுத்து மாறியது' என்கிறார் அருளாளர் அருணகிரிநாதர். ஆகையால் பக்தியால் மட்டுமே விதியை மாற்ற முடியும். ர.ரங்கசாமி, வடுகப்பட்டி, தேனி. *வளர்ப்பு பிராணிகள் பூஜையறைக்கு வருவது சரிதானா?பூஜையறை என்பது கோயிலுக்குச் சமம் அங்கு பிராணிகள் வரக் கூடாது. மீறினால் தோஷம் உண்டாகும். தெய்வீக சக்தி குறையும்.ஆர்.சந்திரசேகரன், அண்ணாநகர் மேற்கு, சென்னை. *என் சித்தப்பாவின் மகன் இறந்து விட்டார். ஒரு வருடம் கோயிலுக்கு போகக்கூடாதா...குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன், முடியிறக்குதல், பண்டிகை, கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். தரிசனத்திற்காக மட்டும் கோயிலுக்குச் செல்லலாம்.