உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 த.பாலசுப்பிரமணியன், கணபதி, கோயம்புத்துார்.*சனீஸ்வரர் அருள் பெற...உடற்குறை உள்ளவர்களுக்கு உதவுங்கள். கருப்பு நிற ஆடை, போர்வை, கம்பளி தானம் செய்யுங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். யாருக்கும் தீமை செய்யாதிருங்கள். ரா.ரங்கராஜன், வடுகப்பட்டி, தேனி. *அருந்ததி என்பவள் யார்?வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி. கணவரையே தெய்வமாக கருதிய கற்புக்கரசி. தெய்வீகப் பசுவான காமதேனு மூலம் அன்னதானம் செய்தவர். அதனால் வானில் நட்சத்திரமாக இன்றும் பிரகாசிக்கிறார். எம்.வருண், தமிழர் என்கிளேவ், டில்லி.*ஸ்டிக்கர் பொட்டு வைக்கலாமா...வைக்கக் கூடாது. குங்குமம்தான் வைக்க வேண்டும். அ.ரவீந்திரன், மணிகெட்டிபொட்டல், கன்னியாகுமரி.*கோயிலுக்குப் போகும் போது தானம் செய்வது கட்டாயமா?கட்டாயமில்லை. மனம் இருந்தால் கொடுப்பதில் தவறில்லை. அகிலா, சிதம்பரம், கடலுார் *சிவன் கோயிலிலுள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டிக்கவசம் பாடினால் பலனுண்டா?நிச்சயம் பலன் உண்டு. கந்தரூபி, திருவேற்காடு, சென்னை.*பாற்கடலை கடைந்த போது என்னென்ன வெளிப்பட்டன?மகாலட்சுமி, காமதேனு, கற்பக மரம், சந்திரன், ஐராவதம்(யானை), உச்சிரவஸ்(குதிரை), புஷ்பக விமானம் ஆகியவை வெளிப்பட்டன. அவற்றை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்பின் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் குடித்தார். அதனால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றார். எஸ்.ராமதிலகம், பெங்களூரு.*மூல நட்சத்திர பெண்ணுக்கு திருமணம் தடைபடுகிறதே...கோளறு பதிகத்தை தினமும் படித்தால் தடை விலகும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது லக்னம், கிரகநிலை, அவற்றின் ஸ்தான பலத்தை ஆராய்ந்து அதற்கேற்ப ஜாதகத்தை தேர்ந்தெடுங்கள். கே.ராகவன், தச்சநல்லுார், திருநெல்வேலி.*எப்போதெல்லாம் சகுனம் பார்க்கலாம்?புதிய முயற்சி தொடங்க, திருமணம் போன்ற சுபவிஷயம் பேச, வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பாக சகுனம் பார்க்கலாம். இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர்.*கைகளை தலை மீது குவித்தபடி சிலர் கும்பிடுகிறார்களே...தலைமீது கைகுவித்து கும்பிடுவோரின் வாழ்வு ஓங்கும்(வளரும்).