கேளுங்க சொல்கிறோம்!
** சில கோயில்களில் மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருப்பது ஏன்?கே. அருள்மொழி, கடலூர்பெரும்பாலும் கோயில் கிழக்கு நோக்கியே இருக்கும். பழமையான கோயில்கள் மேற்கு நோக்கி இருக்கும். இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. சுவாமி எந்த திசை நோக்கி இருந்தாலும், வாசலை கிழக்கு திசையாகப் பாவித்து வணங்க வேண்டும் என சில ஆகமங்களும், மேற்கு திசை நோக்கிய சிவலிங்கம் சிறப்புடையது என சில ஆகமங்களும் கூறுகின்றன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இரண்டுமே சிறப்புடையவை தான்.* கோயில் பூஜையின் போது மணியை வேகமாக ஒலிப்பது ஏன்?கே.ரமேஷ், போத்தனூர்கோயிலில் சுவாமியை தரிசிக்கும் போது ஐம்புலனும் ஒன்றி வணங்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் வழிபாட்டில் ஈடுபடும்போது வேறுகாட்சிகளை கவனித்தால் மன ஒருமைப்பாடு குலைந்து விடும். மனம் ஒன்றுபடாமல் வழிபடுவது வீண் செயல். மணியை வேகமாக ஒலிக்கச் செய்யும் போது, அதன் நாதத்தில் மனம் லயித்து விடுவதால், புலன்கள் செயல் இழந்து விடுகின்றன. 'ஒன்றியிருந்து நினைமின்காள்; உன் தமக்கு ஊனமில்லை' என்னும் திருநாவுக்கரசரின் தேவாரமும் இதை வலியுறுத்துகிறது.* கோபத்தைப் போக்க எந்த தெய்வத்தை வணங்குவது நன்மையளிக்கும்?சி. ஞான குருநாதன், சின்னமனூர்விநாயகர், முருகன், லட்சுமி நாராயணர், உமாமகேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட கோபம் அகலும். இது மட்டும் போதாது. ஒரு விஷயத்தில் கோபப்படும் சூழல் ஏற்பட்டால், முதலில் பேச்சைத் தவிர்த்து விட வேண்டும். தனிமையில் நிறைய யோசிக்க வேண்டும். நமக்கு வெற்றியைத் தரும் வழியைத் தேர்ந்தெடுத்து நிதானமாக நிறைவேற்ற வேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல முடியும்.சுவாமியை நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது என்பது ஏன்?ஓ. இளங்கோவன், புதுச்சேரிபொதுவாக பெரியவர்களிடமும், சுவாமியிடமும் நேருக்கு நேர் நின்று வணங்குதல், பேசுதல் கூடாது. நமது பணிவையும், அன்பையும் தெரிவிக்க ஒருபுறம் சற்று விலகியிருந்து வணங்குவதே முறையாகும். தெய்வங்களை நேரே நின்று வணங்காமல், கடைக்கண் அருட்பார்வை பெற ஒதுங்கியிருந்து வழிபடும்படி சாத்திரங்கள் கூறுகின்றன.விரத காலத்தில் பயறுவகை, பாகற்காயைத் தவிர்ப்பது ஏன்?எம்.ராணி, மதுரை அப்படி ஒன்றும் வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லையே! உங்கள் குடும்ப வழக்கமாக இருக்கலாம். வெங்காயம், பூண்டு போன்ற சிலவற்றைத் தவிர பயறு வகை, பாகற்காயைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.