உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** மணலில் கோயில் கட்டி குழந்தைகள் விளையாடுவது நல்லது தானா?கே. சாமிக்கண்ணு, புதுச்சேரிஇதில் கெட்டது என்ன இருக்கிறது என்று பயப்படுகிறீர்கள்? பின்னாளில் அக்குழந்தைகள் கற்கோயிலே கட்டலாம். விளையாட்டில் கூட புண்ணியத்தைச் சம்பாதிக்கிறார்கள் நமது குழந்தைகள். பிரச்னைக்குரிய உருவ பொம்மைகளைச் செய்து, உங்களை மிரட்டாமல் இருக்கிறார்களே! அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.* செய்வினை தோஷம் நீங்க, ஏதாவது சக்தி மிக்க பரிகாரம் கூறுங்கள்.எஸ். ஹரிபிரசாத், சென்னைநாம் முற்பிறவியில் செய்த தவறுகளே 'செய்வினை' என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதன் விளைவு தான், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள். இதன் தொடர்பானதே, பிறர் நமக்கு செய்யும் மந்திர, தந்திரச் செயல்கள். திருஞான சம்பந்தர் முன்வினைத் துன்பம் நம்மைத் தீண்டக் கூடாது என்பதற்காக, திருநீலகண்ட பதிகம் பாடியுள்ளார். 'செய்வினை நம்மைத் தீண்டப் பெறா- திருநீலகண்டம்' என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். திருவள்ளுவர் குறிப்பிடும் 'ஊழ்வினை' என்பதும் இதை குறிக்கும். பொதுவாக பிறர் நமக்காகச் செய்யும் தீய செய்வினைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மேற்கூறிய சம்பந்தர் தேவாரமும், ராகு கால துர்க்கை வழிபாடும் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாகும்.வீரபத்திரர் வழிபாடு பற்றிச் சொல்லுங்கள்.ஆர்.வி. என். எஸ்.மணி, மதுரைபொதுவாக, எல்லா தெய்வங்களுக்கும் செய்வது போன்றது தான் வீரபத்திரர் வழிபாடும். அஷ்டமி மற்றும் ராகு கால வழிபாடுகள் பிற்காலத்தில் தோன்றியவை தான். வீரசைவர்கள் எனப்படும் லிங்காயத்துச் சமூகத்தினர் மட்டும் வீரபத்திரரையே முதற்கடவுளாக அல்லது குலதெய்வமாக ஏற்று வழிபடுவதை மரபாகக் கொண்டுள்ளனர்.* கோபத்தில் 'சனியன்' என்று திட்டினால் தீமை உண்டாகுமா?அ.பழனிக்குமார், விருதுநகர்பொதுவாக எல்லோருமே திட்டும்போது உபயோகப்படுத்தும் முதல் வார்த்தையாக இது உள்ளது. 'சனியன்' என்ற சொல் சனி கிரகத்தைக் குறிக்காது. சனி பிடித்திருப்பவர்களை, அதாவது, சனியின் பாதிப்புக்கு ஆளானவர்களையே குறிக்கும். கோபப்படுவது என்பதே 'சனி' பிடித்ததற்கு ஒப்பானது தான்! ஆக, ஒருவரைக் கோபப்பட்டு 'சனி' என்று திட்டுகிறவரும், அதே வார்த்தைக்கு சொந்தக்காரர் ஆகி விடுகிறார். இப்படி திட்டுவதால் தீமை ஒன்றும் நேர்ந்து விடாது. இருந்தாலும், கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா?திருமணத் தடை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?அ. கிருஷ்ண சாமி, திருப்பூர்ஜாதகத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் இருந்தாலும், அந்த இடத்தை இந்த கிரகங்கள் பார்த்தாலும் திருமணம் தடைபடும். இதற்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் முருகன் வழிபாடும், வெள்ளி, ஞாயிறு ராகுவேளையில் துர்க்கையை வழிபடுவதும் சிறந்தது. சிறந்த ஜோதிடரிடமும் ஆலோசியுங்கள்.