உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** மூர்த்தி சிறிது.. கீர்த்தி பெரிது என்றால் என்ன?ஜே.பானு, கடலூர்மூர்த்தி என்றால் உருவம். கீர்த்தி என்றால் புகழ். உருவத்தில் சிறிதானாலும் புகழில் சாதிப்பதையே இது குறிக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியும் இது தொடர்புடையதே. சில தெய்வச் சிலைகள் மிகச் சிறிதாக இருக்கும். ஆனால், அந்த தெய்வமோ சக்தி மிகுதியால் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கும். அகத்தியர் உருவத்தில் சிறியவர் தான் என்றாலும், புகழில் எல்லாரையும் விடப் பெரியவர். இது போல மனிதர்களும் தங்கள் உருவக் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், சாதிப்பதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதையே இது போன்ற முதுமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.* சுவாமி தரிசனம் செய்த பின், வழியில் பிச்சையிட்டால் புண்ணியம் போய் விடும் என்பது உண்மையா?அண்ணாமலை, மயிலாப்பூர்புண்ணியம் போய் விடாது. வழிபாடும், தர்மமும் இணைந்தே சொல்லப்பட்டிருப்பதால் சுவாமி தரிசனத்தைப் போன்றே ஏழைகளுக்கு உதவுவதும் புண்ணியம் தான். அதேநேரம் அந்த தர்மத்தை தகுதியானவர்களுக்கு போதுமான அளவுக்காவது செய்ய வேண்டும். பொதுவாக பிச்சையெடுப்பதை ஊக்குவிப்பதால், நிம்மதியாகக் கோயிலுக்கு செல்ல முடிவதில்லை. சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சாலைகளில் உள்ள சிக்னல்களில் கூட பிச்சையெடுப்பவர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே இருக்கிறது.* இரவில் தனியாகச் செல்லும் போது பயப்படாமல் இருக்க மந்திரம் ஏதாவது சொல்லுங்கள்.ஆர். தமிழ்நிலவு, கம்பம்இரவில் தனியாகச் செல்லும் போது, வீண் கற்பனைகளில் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே பயம் இருக்காது. இந்தக் கலியுகத்தில் மனித சக்தியைத் தவிர வேறெதுவும் நம் கண்களுக்குத் தெரியாது... புரியாது... அவற்றினால் தொந்தரவும் கிடையாது. தைரியமாய் செல்லுங்கள். ரொம்பவே பயமாக இருந்தால், திருஞானசம்பந்தர் பாடிய 'வேயுறு தோளி பங்கன்' என்று துவங்கும் 'கோளறு பதிகம்' பத்துப் பாடல்களைப் பாடிக் கொண்டே சென்றாலே போதுமானது.ஆண்களுக்கு அற்பாயுளில் மரணம் சம்பவிப்பதால் வாழ்வில்லாமல் தவிக்கும் பெண்களுக்கு பரிகாரம் கூறுங்கள். எல்.கலா, ஊட்டிமரணம் என்பது யாருக்கு எப்படி ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு அது தீராத மனத்துன்பம் தான். அதேநேரம், இயற்கை நியதியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். தாங்கள் கேட்பதைப் பார்த்தால் உங்கள் குடும்பத்தில் ஆண்கள் மறைவுக்குப் பிறகு பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. குடும்பத்துடன் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து வாருங்கள். குடும்பத்தில் மங்களமான சுப விஷயங்கள் நிகழத் தொடங்கி விடும். செவ்வாய் தோஷம் நீங்க மிக எளிய பரிகாரம் கூறுங்கள்.அ.ரூபினா, நெய்வேலிமுருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். விரைவில் தோஷம் நீங்கி மணவாழ்வு கைகூடும்.