கேளுங்க சொல்கிறோம்!
** மனதை ஒருநிலைப்படுத்த பக்தி மார்க்கத்தில் இடம் இருக்கிறதா?கே.ராகவி, காஞ்சிபுரம்பக்தி மார்க்கத்தின் அடிப்படையே மனதை ஒருநிலைப்படுத்துவது தானே. மனம் என்பது விசாலமானது. எவ்வளவு விஷயங்களை வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் ஆற்றல் அதற்குண்டு. காது கேட்பது, கண் பார்ப்பது, மூக்கு நுகர்வது, வாய் பேசுவது, நாக்கு சுவைப்பது என எல்லாவற்றையும் மனம் தான் நமக்கு அறிவுறுத்துகிறது. ஒரு பாடலைக் கேட்கும்போது, அது இன்ன பாடல், இன்னார் பாடுகிறார் என்ற விபரங்களை மனம் தான் முதலில் அறிந்து அறிவுக்குத் தெரியப்படுத்து கிறது. ஒரு விஷயத்தை ஆழ்ந்து மனம் சிந்திக்கத் தொடங்கி விட்டால், கண் திறந்திருந்தாலும் காட்சிகளைப் பதிவு செய்யாது. அதிக நேரம் ஆடாமல், அசையாமல் தியானம் செய்யப் பழகினால் மன ஒருநிலைப்பாடு கைகூடும். இறையருளுடன் மற்ற செயல்களை முழுக் கவனத்துடன் செய்து வெற்றி பெற இந்தப்பயிற்சி உதவும்.ருத்ராட்சம் அணிய விரும்புகிறேன். எத்தனை முக ருத்ராட்சம் அணிவது நன்மையளிக்கும்?எஸ். ருத்ராபதி, திருப்பூர்ருத்ராட்சத்திற்கு எத்தனை முகம் இருந்தாலும் நன்மையானது தான். ஒன்று, ஐந்து, ஆறுமுகம் கொண்டவை மிகச்சிறப்பானவை. இப்போது, ருத்ராட்சம் ஒரிஜினலாகக் கிடைப்பது அபூர்வமாக உள்ளது. செயலில் குறுக்கிடும் தடை நீங்கவும், செல்வம் பெருகவும் அன்றாடம் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?ப. அன்பரசு, திண்டுக்கல்ஞானசம்பந்தர் பாடிய 'பிடியதன் உருவுமை' எனத் தொடங்கும் தேவாரத்தைச் சொல்லி வந்தால் தடை நீங்கும். 'தனம் தரும் கல்வி தரும்' எனத் துவங்கும் அபிராமி அந்தாதி பாடலைப் பாடி வந்தால் செல்வம் பெருகும். * குடும்ப நிர்வாகத்தில் நடராஜர் ஆட்சி, மீனாட்சி ஆட்சி என பிரித்துக் கூறுகிறார்களே! இதன் விளக்கம் என்ன?ஆர்.அகிலா, மதுரைஉங்கள் கேள்வியிலேயே பதில் வந்து விட்டது. ஒற்றுமையாய் வாழும் கணவன், மனைவியைப் பிரிக்கத்தான் இப்படி சொல்கிறார்கள். மதுரையிலே மீனாட்சிக்கு ஆறு மாதம், சுந்தரேஸ்வரருக்கு ஆறுமாதம் ஆட்சி இருந்தது. அதுகூட கால மாறுபட்டால் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சிக்கு என குறைந்து விட்டது. ஆவணி மூலம் முதல் சித்திரை வரை சுந்தரேஸ்வரரே ஆளுகிறார். குடும்ப நிர்வாகத்தில் நடராஜரும், மீனாட்சியும் இணைந்தே பணி செய்யட்டும். குடும்பம் நன்றாக இருக்கும். அதெல்லாம் சரி...<உங்க வீட்டில் அகிலா ஆட்சியா? இல்லை உங்க வீட்டு ஐயா ஆட்சியா?* கோயிலுக்குச் சென்றால் முதலில் வணங்க வேண்டியது ஆண் தெய்வமா? பெண் தெய்வமா?டி.ஜெயந்தி, முகப்பேர்சிவாலயம் என்றால் சிவன் (மதுரை போன்ற ஒன்றிரண்டு விதிவிலக்கு) பெருமாள் கோயில் என்றால் தாயாரை வணங்குவது மரபு. அது சரி...இந்த வாரம் 'ஆண் பெண் வாரமா?' கேள்விகளெல்லாம் இப்படி இருக்கிறதே!