உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* பாரத தேசத்தை புண்ணிய பூமி என்று சொல்வதன் பொருள் என்ன?கே.என். தசரதராமன், சென்னைஆன்மிகத்தின் மூலம் மக்களை நெறிப்படுத்தும் வழியை முதலில் கூறியது வேதங்கள் தான். மதம் உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'சனாதன தர்மம்' என்ற பெயரில், வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆன்மிகம் உலக மக்களிடையே பரவியிருந்தது. தேவர்களின் நிலைப்பாடுகளையும், யாகங்களின் மூலம் அவர்களை திருப்தி செய்து மழை, பயிர்வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவற்றைப் பெறலாம் என்று வேதங்கள் கூறுகின்றன. தெய்வ வழிபாட்டுக்குரிய விஷயங்களாக அதில் சில கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமேஸ்வரத்திற்கும், இமயமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற இடமாகக் கூறுகிறது. வேதத்தில் குறிப்பிடப்படும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி போன்ற நதிகள் பாரதத்தில் தான் உள்ளன. சிவன், விஷ்ணு, பார்வதி, விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் திருவருட்செயல்கள் இங்கு தான் நிகழ்ந்தன. யாராலும் தோற்றுவிக்கப்படாத சிறப்புடைய சனாதன தர்மம் பல அருளாளர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, இந்து மதமாக தழைத்து விளங்குவதோடு பிறரையும் அரவணைத்துக் கொண்டும் நிற்கிறது. உலகளவில் ஆன்மிகம் என்பது ஆலமரம் என்றால் அதன் ஆணி வேராகத் திகழ்வது நம் புண்ணிய பாரத தேசம் தான். ** கிரகப்பிரவேசத்தின் போது பசுவுக்கு பூஜை நடத்துவது ஏன்?து.சுபிக்ஷா, அவினாசிவீடு கட்டப்படும் இடத்தில் நாம் அறிய முடியாத சில குறைபாடுகள் இருக்கலாம். சில விலங்கினங்கள் இறந்திருக்கலாம். மனிதர்களே கூட சில தவறுகள் செய்திருக்கலாம். அஸ்திவாரம் தோண்டும் போது, மண்டை ஓடு, எலும்பு போன்றவை கிடைப்பதையும் பார்க்கலாம். இதுபோல குறைகள் உள்ள நிலையில் பல வகையான தெய்வங்களைக் குறித்து வேள்வி நடத்தப்பட வேண்டும். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக ஐதீகம். எனவே, கிரகப்பிரவேசத்தின் போது, கோபூஜை செய்து விட்டால், எல்லா குறைபாடுகளும் நீங்கி விடுவதோடு புதிய இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் பெருகும்.தெய்வ குற்றம் என்பது ஒருவருக்கு எந்தெந்த விதத்தில் உண்டாகிறது?கே.என்.ராஜலட்சுமி, சென்னைசெய்ய வேண்டியதைச் செய்யாவிட்டாலும், செய்யக்கூடாததைச் செய்தாலும் தெய்வ குற்றம் உண்டாகும். இது எந்தெந்த விதம், எத்தனை விதம் என்பதை நீங்களே ஆராய்ந்து கொள்ளலாமே!* சுவாமிக்குப் போட்ட பூக்களை நீர்நிலைகளில் போட வழியில்லையே! அதை குப்பையில் போடுவது சரிதானா?வி.எஸ்.மோகன், மதுரைசுவாமிக்குப் போட்ட பூக்களை கண்ணில் ஒற்றிக் கொண்டு விட்டால், அவற்றிலுள்ள இறையருள் நம்மிடம் வந்து விட்டதாக மனதார எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு காலில் மிதிபடாத இடத்தில் போட்டு விடலாம். குப்பையில் போடுவதாகக் கருத வேண்டாம். முக்கியமாக வாகனங்களுக்கு (கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்) போட வேண்டாம். பலர் காலில் மிதிபட நேர்ந்து விடுகிறது.