உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** திருடி வைத்த பிள்ளையாரை வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பது உண்மையா?சித்ரா, மதுரைதிருட்டு என்றாலே குற்றம் என்று சொல்லப்படும் போது எப்படி நன்மை கிடைக்கும்? இது போன்ற பொய், புரட்டுகளை நம்பி தவறு செய்யாதீர்கள்.* வயதானவர்கள் வயதில் குறைந்தவர்களின் காலில் விழுந்து வணங்கலாமா?என்.ஜெயபால், திருப்பூர்ஆன்மிகத்தைப் பொறுத்தவரை இது போல் வணங்கலாம். மகான்கள், ஆச்சாரியார்கள், குருமார்கள் இவர்களை வயது வித்தியாசம் பாராமல் வணங்க வேண்டும். மற்றபடி காரியத்திற்காக காலைப் பிடிக்கும் விஷயத்தைப் பற்றியெல்லாம் நாம் பேச வேண்டாம்.* வயதாகி விட்டதால் அன்றாடம் என்னால் குளிக்க முடியவில்லை. கைகால்களை மட்டும் சுத்தம் செய்து கொண்டு பூஜைஅறையில் விளக்கேற்றுகிறேன், இப்படி செய்யலாமா?எஸ்.வெங்கடலட்சுமி, சென்னைவயது முதிர்வது எப்படியோ அப்படியே உங்களின் இத்தனை ஆண்டு கால வாழ்வின் புண்ணியமும் முதிர்ந்திருக்கும். எனவே, நீங்கள் எப்பொழுதுமே ஆசாரமானவர் தான். தள்ளாத வயதிலும் நல்லது செய்ய வேண்டும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதே. அதுவே பெருமைக்குரிய விஷயம் தான்.மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது உண்மையா?ச.பர்மிதா, கடலூர்உண்மை தான். செல்வவளம் பெருகுவதுடன் ஆயுளும் அதிகரிக்கும். கோயில்களில் நெய்விளக்கு மட்டும் தான் ஏற்ற வேண்டுமா?ஆர். ஜெயபாரதி, சாத்தூர்நெய் தீபம் ஏற்றுவது உயர்ந்தது. சுத்தமான பசு நெய் இதற்கு ஏற்றது. நல்லெண்ணெய் தீபம் விசேஷமானது தான். ஆனால், இப்போது கோயில் வாசல்களில் மலிவு விலையில் கிடைப்பவை எல்லாம் என்னவென்றே தெரியவில்லை.வெள்ளியன்று கடன் வாங்கவோ, பொருள்களை விற்கவோ கூடாது என்கிறார்களே ஏன்?ராஜாராம், சென்னைவெள்ளிக்கிழமையில் கடன் கொடுக்கத் தான் கூடாது. கொடுத்தால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். பொருட்களை விற்பதற்கெல்லாம் கிழமை என்று எதுவுமில்லை. அப்படி பார்த்தால் விற்பனை செய்யும் எல்லாக் கடைகளுக்குமே விடுமுறையளிக்க வேண்டி வந்து வடும்.