கேளுங்க சொல்கிறோம்!
** கோயிலுக்குப் போக நேரமின்மையால், தாயின் ஆசியைப் பெற்று பணிக்குச் செல்கிறேன். ஆன்மிகத்திற்கு இது ஏற்புடையதா?கே.மனோகரன் ரீஜா, சென்னைதாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. 'மாத்ரு தேவோ பவ' என்று வேதமும் தாயைப் போற்றுகிறது. தாராளமாக தாயை வணங்கி விட்டு அன்றாடப் பணியைச் செய்யுங்கள். கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவீர்கள். * தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாரே. ஏன்?எஸ்.விஸ்வநாதன், பேரூர்சிவன் வீற்றிருக்கும் கைலாய மலை வடக்கில் இருக்கிறது. இறந்த உயிர்கள் சென்றடையும் பிதுர்லோகம் தெற்கில் இருக்கிறது. வடக்கு நோக்கி செல்வதைச் சரண யாத்திரை, தெற்கு நோக்கி செல்வதை மரண யாத்திரை என்பர். உயிர்களைத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அழைக்கும் விதமாக தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.* மாடியில் இருந்தபடியே மலைக்கோயில் இறைவனை வழிபடுவதால் பலன் கிடைக்குமா?ஜி.இளங்கோவன், பழநிலட்சக்கணக்கானோர் தவமிருந்து தரிசிக்க வரும் பழநியில் இருந்து கொண்டு இப்படி கேட்கலாமா? சகல நலன்களும் அருளும் தண்டாயுதபாணியை இயன்ற வரை மலையேறியே தரிசனம் செய்யுங்கள். வயதான காலத்தில் நீங்கள் கேட்பது போல செய்யலாம்.* கடை திறக்கும் போது வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது ஏன்?பெ.பொன் ராஜபாண்டி, மதுரை இதெல்லாம் பிற்காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட்சுமிக்கு விருப்பமான மஞ்சளை கால்படும் விதமாகக் கீழே தெளிப்பது தவறு. * அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்ததை சுவாமிக்குப் படைக்கலாமா?ஸ்ரீதேவி, கடலூர்ஒருமுறை அர்ச்சனை செய்தாலே தேங்காய் பிரசாதமாகி விடும். இதை 'நிர்மால்யம்' என்பர். மீண்டும் அந்த தேங்காயைப் பயன்படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது. * கோயிலில் காப்பு கட்டி விட்டால் காப்புத்தடை உள்ளது என்று சொல்லி வெளியூர் போகக்கூடாது என்கிறார்கள். இது சரியா?கே. ரமேஷ், திருப்பூர்திருவிழாவை ஊரிலுள்ள அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும் என்பதால் இப்படி கூறியிருப்பார்கள். சாஸ்திரப்படி, காப்பு கட்டிக் கொள்பவருக்குத் தான் இது பொருந்தும். மற்றவர்கள் வெளியூர் செல்லக் கூடாது என்ற தடை இல்லை.