உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?ரஜினி செந்தில், ஒண்டிப்புதூர்பாடத் தெரிந்தவர்கள் பாடலாம். மற்றவர்கள் மவுனமாக வழிபடலாம். இரண்டுமே சிறந்தவை தான். செய்வன திருத்தச் செய் என்பார்கள். அதை நினைவில் கொண்டால் போதும். வழிபாடு முழுமை அடையும்.* வீட்டிலுள்ள சுவாமி படங்களை எத்தனை ஆண்டுக்கொரு முறை மாற்ற வேண்டும்?எஸ்.விஜயா, கடலூர்இத்தனை ஆண்டு என்ற கணக்கு கிடையாது. படம் உடைந்து போனாலோ, மிக பழுதாகிப் போனாலோ மாற்றுவது அவசியம். மற்றபடி, படத்தை மாற்றாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் பெரியவர்கள் வழிபட்ட படங்களில் தெய்வ சாந்நித்யம் நிறைந்திருக்கும். ** மனதில் அடிக்கடி விரக்தி எண்ணம் மேலோங்குகிறது. பரிகாரம் கூறுங்கள்.கே. அஞ்சம்மாள், ராமநாதபுரம்எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டால் விரக்தி உண்டாகாது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற உண்மையை உணர்ந்தால், நிம்மதிக்கு எப்போதும் குறை இருக்காது. திங்கள் அல்லது பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மன் சன்னிதியில் தீபமேற்றி வழிபடுங்கள். * கல்லால மரம், ஆலமரம், இச்சி மரம் என்று தட்சிணாமூர்த்தி பலவிதமான மரங்களின் நிழலில் அருள்புரிவதன் நோக்கம் என்ன?ஆர்.நிரஞ்சனா, கூடுவாஞ்சேரிகல்லால மரமே ஆலமரம் என்று சுருக்கமாக கூறப்படுகிறது. இச்சிமரம் என்றாலும் ஆலமரமே. சங்கப் பாடல்களில் 'ஆலமர் செல்வன்' என்று தட்சிணாமூர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளார்.* தூக்கம் வராத சமயத்தில் படுத்தபடி ராமநாமம் ஜெபிக்கலாமா?ஆர். சாவித்திரி, போரூர்'ராமா' என்னும் இரண்டெழுத்தை ஜெபித்தால் நன்மையும், செல்வமும் வாழ்வில் சேரும். தீமையும் பாவமும் பறந்தோடும். ராம நாமத்தை எப்போதும் எந்த சூழலிலும் ஜெபிக்கலாம். * புண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பாவம் நீங்குமா? அ.கல்யாண ராமன், கள்ளக்குறிச்சிஅறிந்தே கூட செய்து இருந்தாலும், மனம் வருந்தி கடவுளிடம் சரணடைந்தவர்கள் கடல், நதிகளில் நீராடபாவம் நீங்கும். அறியாமல் செய்த பாவம் நிச்சயம் அகலும்.