தானம் செய்யுங்கள்
பறவை, விலங்குகளுக்கு இல்லாத அறிவை மனிதனுக்கு கொடுத்துள்ளார் கடவுள். அது தான் ஆராயும் தன்மை. அவற்றால் புண்ணியச்செயல்கள் பல செய்யலாம். பலனை எதிர்பாராமல் பிறருக்கு செய்யும் தானம் அவருடைய குலத்தினை தழைக்கச் செய்யும். அதனால் ஒவ்வொரு பிறவிகளில் உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் அது நன்மை தீமைகளை அனுபவிக்கிறது. அதில் இருந்து விடுபட தான, தர்மம் செய்வது சிறப்பு. * செய்யும் தான தர்மங்கள் தகுதியுடையவரை போய் சேரும் போது அதற்கு உத்தம பலன். * தகுதியுடைவர் தானா என பார்க்காமல் செய்யும் தானத்திற்கு மத்திம பலன். * எல்லோரும் செய்கிறார்கள் என நினைத்து செய்தால் அதற்கு அதமப்பலன். * அன்னதானம், பால், தயிர் - மன நிம்மதி, வாக்கு பலிதம், உடல் ஆரோக்கியம். தீவினை நீங்கும்.* வஸ்திரதானம் - ஆயுள் அதிகரிக்கும்.* உப்பு, வெல்லம் - சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.* பூசணிக்காய் - நோய் விலகும். பித்ருக்களின் ஆசி.* வாத்தியக்கருவிகள் - இந்திர வாழ்வு கிடைக்கும்* பொன் - மோட்சம் கிடைக்கும்* தைலம், துணி - தொழு நோய் தீரும்.* தீப தானம் - கண் பார்வை பலப்படும். நல்ல எதிர்காலம் தேடிவரும். பிரச்னைகளுக்கு விடிவு காலம் பிறக்கும். * தேன், நெய் - சகல பாக்கியங்களை அனுபவிப்பர்.* எண்ணெய், உளுந்து, பழங்கள், நீர் - கஷ்டங்கள் விலகும், உடல் ஆரோக்கியம் சீராகும்.* திருமணத்திற்கு உதவி - எடுத்த பிறவிகளின் பாவம் தீரும்.