மனப்பாடப் பகுதி
UPDATED : அக் 31, 2019 | ADDED : அக் 31, 2019
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்கமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்பொருள்: முருகப் பெருமானின் ஆறுமுகங்களும், வலிமைமிக்க பன்னிரு கரங்களும் வாழ்வாங்கு வாழட்டும். மலையை இருகூறாக்கும் சிறந்த வேலாயுதம் நிலைக்கட்டும். சேவல் கொடியும், பவனி வரும் மயிலும் நிலைத்து விளங்கட்டும். தெய்வானையும், மாறுபாடு இல்லாத வள்ளி நாயகியும் நீடூழி வாழட்டும். பெருமைமிக்க முருகனடியார்கள் என்றென்றும் நிலைபெற்று வாழட்டும்.