உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

காசினி இருளை நீக்கும் கதிரொளியாய் எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்ததேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி.பொருள்: செம்மையான கதிரவனே! உலகத்தின் இருட்டைப் போக்கிட ஒளிக்கதிரை பரப்புகின்றாய். உலகத்தவர்கள் உன்னைக் கண்டதும் கைகூப்பி வணங்குகிறார்கள். மக்கள் சுகமாய் மண்ணில் வாழ, ஏழு குதிரை பூட்டிய தேர் மீதேறி மேரு மலையை வலமாக சுற்றி வருபவனே! தேசிகனே! என்னை காத்தருள்வாயாக.