மனப்பாடப்பகுதி
UPDATED : நவ 11, 2018 | ADDED : நவ 11, 2018
ஆடும் பரிவேல் அணிசேவல் எனபாடும் பணியே பணியாய் அருள்வாய்தேடும் கயமாமுகனைச் செருவில் சாடும் தனியானை சகோதரனேபொருள்: நடனமாடும் மயில் மீது வலம் வரும் முருகனே! அழகான சேவல் கொண்டவனே! உன்னைப் பாடிப் புகழும் பணியை அருள்புரிவாயாக. போர்க்களத்தில் கஜமுகாசுரனைத் தேடிச் சென்று அழிக்கும் விநாயகப்பெருமானின் தம்பியே! உன்னைச் சரணடைகிறேன்.