மனப்பாடப்பகுதி
UPDATED : நவ 21, 2019 | ADDED : நவ 21, 2019
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரைமறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.(சுந்தரர் பாடிய தேவாரம்)பொருள்: பறக்கும் கிளிகளே! பாடும் நாகணவாய் என்னும் பெயர் கொண்ட பறவைகளே! எனக்கு தர்மத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருவாரூர் தியாகேசப் பெருமான் மீது ஆசை. அவரை மறக்க முடியாததால் உடல் மெலிந்தேன். என் வளையல்கள் கழன்று விழுகின்றன. துாக்கமின்றி தவிக்கும் என் நிலையை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.