மனப்பாடப்பகுதி
UPDATED : மே 01, 2020 | ADDED : மே 01, 2020
பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும்கங்குகரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்கநிழல் பரப்பிமயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச் செங்குமுதம் மலரவரு மதியே எல்லாம்செய்ய வல்ல கடவுளே தேவ தேவே.பொருள்: மதங்கள் என்னும் ஆறுகள் கலப்பதால் கரையில்லாமல் பொங்கி நிற்கும் கடல் போன்றவனே! உலகிலுள்ள அனைத்தையும் பார்க்கும் சக்தியுள்ளவனே! குளிர்ந்த சோலைகளில் உள்ள மரங்கள் நிழல் தருவது போல பக்தர்களின் துன்பங்களைக் களைபவனே! பூக்கள் மலர்ந்திருக்கும் தடாகம் போன்றவனே! ஞானம் என்னும் குமுத மலரை மலரச் செய்யும் நிலவே! எதையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! உன்னை வணங்குகிறேன்.