மனப்பாடப்பகுதி
UPDATED : மே 16, 2020 | ADDED : மே 16, 2020
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்துள்ளியோடும் தொடர்வினைகளேஅப்பம் முப்பழம் அமுது செய்தருளியதொப்பையப்பனைத் தொழ வினையறுமேபொருள்: யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றி முகம் கொண்ட அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிற தந்தங்களை உடைய அவர், நம்மைத் தொடரும் தீவினையைப் போக்கியருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகருக்கு அப்பம், மா, பலா, வாழை, அன்னத்தைப் படைத்து வழிபட்டால் வினைகள் வேரோடு அகலும்.