மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 14, 2020 | ADDED : ஆக 14, 2020
நயனங்கள் மூன்றுடைய நாதனும் வேதமும் நாரணனும்அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரேசிவனும், வேதங்களும், திருமாலும், பிரம்மாவும் போற்றும் அபிராமி அன்னையின் மலர் பாதங்களை சரணடைந்தால் என்ன பரிசு கிடைக்கும் தெரியுமா? தேவலோகப் பெண்கள் இசைத்து ஆடிப்பாடி மகிழ்விப்பர். கற்பக மரத்தடியில் தங்கும் பாக்கியம் கிடைக்கும்.