உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

அலகிலாக் கருணை என்னும் அந்தளிர் ஈன்றது ஒல்லைஉலகெலாம் பூத்துக் கங்கை உவட்டெடுத்து ஒழுகும் சென்னிமலையினில் படர்ந்த பச்சை மரகதக் கொடியை ஞானக்கலையமுது ஒழுகும் சொற்கனியினைக் கருத்துள் வைப்பாம்.பொருள்: எல்லையில்லா கருணை சுரப்பவளே! ஒளி பொருந்திய உலகத்தை செழிக்கச் செய்பவளே! கங்கையைத் தாங்கிய கயிலைநாதனைச் சுற்றிப் படர்ந்த பச்சை மரகதக் கொடியே! ஞானக்கலையோடு திகழும் அமுதமே! அருள் சுரக்கும் இனிய சொல்லே! உமையவளே! உம்மை சிந்தையில் வைத்துப் போற்றுகிறோம்.