மனப்பாடப்பகுதி!
UPDATED : டிச 27, 2013 | ADDED : டிச 27, 2013
நீறார் மேனியனே நிமலாநினை அன்றிமற்றுக்கூறேன் நாவதனால் கொழுந்தே என் குணக்கடலேபாறார் வெண்தலையில் பலிகொண்டு உழல் காளத்தியாய்ஏறே உன்னை அல்லால் இனிது ஏத்த மாட்டேனே.பொருள்: திருநீறு பூசிய மேனியனே! தூய்மையானவனே! உன்னைத் தவிர மற்றவர்கள் பெயரை என் நாவால் சொல்ல மாட்டேன். அருட்கொழுந்தே! குணக்கடலே! பருந்துகள் திரியும் காளத்திமலையில்(காளஹஸ்தி), பிரம்ம கபாலத்தில் பிச்சை ஏற்பவனே! கம்பீரம் மிக்கவனே! உன்னை அல்லாமல் வேறொருவரை வணங்க மாட்டேன்.