மனப்பாடப்பகுதி!
UPDATED : ஜன 24, 2014 | ADDED : ஜன 24, 2014
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத் தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே. பொருள்: வண்ணத் தாமரையில் இருக்கும் பிரம்மாவாலும், உலகை அளந்த திருமாலாலும் கூட நெருங்க முடியாதவன் சிவபெருமான். அப்பெருமானின் திருவடியில் குளிர்ச்சி மிக்க பூக்களை இட்டு வணங்கி, சிந்திக்கும் அடியவர்களுக்கு துன்பம் உண்டாகாது.