மனப்பாடப்பகுதி!
UPDATED : மார் 04, 2014 | ADDED : மார் 04, 2014
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும்அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.பொருள்: மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தவரே! விண்ணிலிருந்து பாய்ந்த கங்கையை சடையில் தாங்கியவரே! பாவத்தைப் போக்குபவரே! கொடிய அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்தவரே! திருவாரூரில் அரநெறியப்பராக விளங்கும் சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.