உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்து உருகி நைபவர்க்கு ஊனமொன்று இன்றியே அருகி நின்றிடும் ஆனைக்கா அண்ணலே. பொருள்: திருவானைக்காவல் சிவனே! உன்னை எண்ணினால், கெட்ட எண்ணங்களைத் திருத்தி, நேராக்கி, சிவானந்தம் என்னும் ஊற்று நீரைப் பருகச் செய்வாய். உன்னை எண்ணினால் எங்கள் உள்ளம் உருகும். எந்தவிதக் குறையும் இருக்காது.