மனப்பாடப்பகுதி!
UPDATED : ஜூலை 02, 2014 | ADDED : ஜூலை 02, 2014
வன்மா வையம் அளந்த எம் வாமனா! நின் பன்மா மாயப் பல்பிறவியில் படுகின்ற யான் தொன்மாவல் வினைத் தொடர்களை முதலரிந்து நின்மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ! பொருள்: வலியதும், பெரியதுமான இந்த உலகத்தை திருவடியால் அளந்த வாமனமூர்த்தியே! மாயங்கள் நிறைந்த இந்த பிறவிக்குள் அகப்பட்டதால், படாத பாடு படுகின்றேன். என் பழைய முன்வினைப் பாவமெல்லாம் அடியோடு நீங்கி, உமது பெரிய திருவடிகளை அடைவது எந்த நாளோ?