உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்குவெஞ்சின முகங்களாகி விசையொடு பாயும் கங்கைசெஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.பொருள்: ஐம்புலனை அடக்கி, ஆற்றலையெல்லாம் வெளிப்படுத்தி, பகீரதன் நெடுங்காலம் தவத்தில் ஈடுபட்டான். அவனது தவத்தை மெச்சிய சிவன், ஐந்து முகத்தோடு காட்சியளித்து, வானுலக கங்கையைத் தன் சிவந்த சடையில் ஏற்று அருள் புரிந்தார். அவரே திருச்சேறை என்னும் தலத்தில் செந்நெறியப்பர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார்.குறிப்பு: கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ., தூரத்தில் திருச்சேறை உள்ளது.