மனப்பாடப்பகுதி
UPDATED : நவ 04, 2014 | ADDED : நவ 04, 2014
மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக் கிடமாகாதேகனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத்தானைநினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினீரே.பொருள்: நல்ல மனம் படைத்த சிவனே! தாய், தந்தை, மனைவி, மக்கள், உறவினர் என்று உறவுகளுடன் வசிக்கிறேன். இதனால், தீவினைகளில் அழுந்தி மனதில் வேதனை உண்டாகிறது. ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த தலமான நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரே! உம்மை மனதார வணங்கினால், இந்த சம்சார துன்பம் நீங்குவதோடு, பிறவிப்பயனும் உண்டாகுமாமே! அருள்வீரா!