உள்ளூர் செய்திகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடியது

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கியபேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்வாழ உறுதியேல் மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!பொருள்: அழகிய சந்திரனே! பெரிய பானைகளில் உள்ள வெண்ணெயை கை நிறைய அள்ளி உண்டு மகிழும் பெரிய வயிறைக் கொண்டவன் கண்ணன். அவன் உன்னைக் கூவி அழைக்கின்றான். நீ வராவிட்டால், தன் ஆயுதமான சக்கரத்தை உன் மேல் எறிந்து விடுவான். இதில் சந்தேகமில்லை. வாழ விரும்பினால், கண்ணன் அழைக்கும்போதே ஓடி வந்து விடு.