உள்ளூர் செய்திகள்

அர்ச்சனைப் பூக்கள்

இந்த வார ஸ்லோகமசிவயோஸ்தனுஜா யாஸ்து ச்ரிதமந்தார சாகினே!சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!பொருள்: பார்வதி பரமேஸ்வரரின் புத்திரரும், சரணடைந்தவர்களைக் காப்பவரும், சிறந்த பறவையான மயிலை வாகனமாகக் கொண்டவருமான சுப்பிரமணிய சுவாமிக்கு மங்களம் உண்டாகட்டும்.மனப்பாடப் பகுதிஉன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினைதீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே! பொருள்: உன்னைத் தவிர வேறு யார் ஒருவரையும் நான் நம்பவில்லை. இனிமேல் யார் ஒருவரையும் பின்தொடர்ந்து வழிபடமாட்டேன். பன்னிரு கைகளைக் கொண்டவனே! கையில் தண்டாயுதத்தை தாங்கியவனே! கொடியவினைகளைப் போக்கியருளும் வேலாயுதப்பெருமானே! திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானே! உன்னை வணங்குகிறேன்.