உள்ளூர் செய்திகள்

உள்ளதைச் சொல் நல்லதைச் செய்

விரும்புகிறார் வேதாத்ரி மகரிஷி* எல்லாருக்கும் நன்மை உண்டாகவேண்டும் என்று எண்ணுவதே நல்லவர்களின் குணமாகும். உள்ளதைச் சொல்லுங்கள். நல்லதை எண்ணுங்கள். நல்லதைச் செய்யுங்கள். நல்லவனாகவே வாழுங்கள்.* மனிதன் முழுமை பெறவேண்டுமானால் பரம்பொருளோடு ஒன்றுவது தான் ஒரே வழி. * படிப்படியாக மட்டுமே நல்ல பண்புகளைப் பழகிக் கொள்ள முடியும். ஒரேநாளில் எந்த விஷயத்தையும் கற்றுவிட முடியாது.* மனத்தூய்மை, சத்துள்ள உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு நல்வாழ்க்கையான அடிப்படை விஷயங்கள்.* துன்பம் என்பது அறவே இல்லாத மகிழ்ச்சியான அனுபவங்களையே நாம் பெற எண்ணுகிறோம். ஆனால், அதற்கான வழிமுறைகளைத் தான் அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.* கோபமின்றி வாழ்வதே உயர் வாழ்வின் அடிப்படை குணம். சினமில்லாதவன் ஞானப்பாதையில் பயணம் செய்யத் துவங்குவான்.