உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீ நாரதேன ஸஹ பாரத கண்டமுக்யைஸ் த்வம் ஸாங்க்ய யோக நுதிபி: ஸமுபாஸ்ய மாந: Iஆகல்ப கால மிஹ ஸாது ஜநாபிரக்ஷீ நாராயணோ நர ஸக: பரிபாஹி பூமந் IIநாராயண பட்டத்ரி 21ம் தசகம் முழுவதும் எம்பெருமானின் வெவ்வேறு வடிவங்களையும் அதனை துதிப்பவர்களையும் பற்றி கூறுகிறார். அதில் 9 பாடல் நர நாராயணர்களை தியானிப்பதாக உள்ளது.பரத கண்டம் என்னும் இந்த புண்ணிய பூமியில் உள்ள நரநாராயண மூர்த்தியை நாரதர் போற்றுகிறார். அவரையே நாராயண பட்டத்ரியும் வணங்குகிறார். கலியுகத்தில் நம்மை கரை சேர்க்க வேறு அவதாரம் கிடையாது. எனவே பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தால் கலியுகத்தில் செய்த பாவம் அனைத்தும் விலகி நற்கதி கிடைக்கும்.- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in