உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

ஸர்வைர் த்ருவாதிபிருடு ப்ரகரைர் க்ரஹைச்சபுச்சாதி கஷே்வ வயவஷே்வபி கல்ப்யா மாநை: த்வம் ஸிம்சுமார வபுஷா மஹதாமுஸ்ய:ஸந்த்யாஸு ருந்தி நரகம் மமஸிந்து சாயின்மகாவிஷ்ணு பலவித அவதாரங்களை எடுத்துள்ளார். எம்பெருமானை விஷ்ணு புராணம் 'நாராயணோ நலந்தாம் நாதஸ்யாதாரஸ் ஸ்வயம் ஹ்ருதி' எனக் கூறுவது போலவும், விஷ்ணு சஹஸ்ர நாமம் 'நக்ஷத்ரீ' என்னும் திருநாமத்தால் அழைப்பது போலவும் அவரே அனைத்து நட்சத்திர கூட்டத்திற்கும் தலைவராக இருக்கிறார். அந்த நட்சத்திர கூட்டத்தினை சிம்சுமார (முதலை) வடிவம் எடுத்து தன்னுடைய வாலில் அடக்கி இருக்கிறார். இவரை மாலை நேரத்தில் நாம் வழிபட்டால் அனைத்து நட்சத்திரங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். - எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in