உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. காளிதாசருக்கு அருள்புரிந்த காளி எங்கு வீற்றிருக்கிறாள்?உஜ்ஜயினி2. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...ஸ்ரீசைலம்(ஆந்திரா)3. சிம்மவாகினியாக வந்து மகாலட்சுமி கோலாசுரனை அழித்த தலம்....மகாராஷ்டிரா கோலாப்பூர் 4. தசரா பண்டிகை அரசு விழாவாக நடைபெறும் திருத்தலம்....மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்5. ராமகிருஷ்ணருக்கு அருள் செய்த காளி எங்கு கோயில் கொண்டிருக்கிறாள்? கோல்கட்டா தட்சிணேஸ்வரம் 6. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்7.அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யோகபீடத்தில் அருளும் அம்மன்...குற்றாலாம் குழல்வாய்  மொழியம்மை8. சரஸ்வதிதேவி மற்றும் பிரம்மதேவருக்கு கோயில் இருக்கும் தலம்...புஷ்கரம்(சக்திபீடங்களில் இத்தலம் காயத்ரிபீடமாகும்) 9. தர்மசம்வர்த்தினி என்னும் திருநாமம் கொண்டு அறம் வளர்க்கும் அம்பிகை தலம்...திருவையாறு10. மகராஷ்டிராவில் தைரியத்தை அருளும் அம்பிகையாக விளங்குபவள்....பவானி (வீரசிவாஜியின் இஷ்ட தெய்வம்)