உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. அவ்வையார் முருகனிடம் நாவல்பழம் பெற்ற படைவீடு...........சோலைமலை2. குருமலை மருவிய பெருமாளே என அழைக்கப்படுபவர்...........சுவாமிமலை முருகன்3. அன்பரின் நெஞ்சமாகிய குகையில் இருப்பதால் முருகனை ........என்பர்குகன்4. முருகன் மீது நக்கீரர் பாடிய சங்கத்தமிழ் நுால்..........திருமுருகாற்றுப்படை5. முருகனின் மனைவியான வள்ளி பிறந்த ஊர் ........திருத்தணி அருகிலுள்ள சித்துார்6. வடநாட்டில் முருகப்பெருமானை ........... என குறிப்பிடுவர்கிருத்திக்7. கந்தகோட்டத்து முருகனிடம் உத்தமர்களின் உறவை யாசித்தவர்.............வள்ளலார்8. மலையப்பபிள்ளையால் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சிலை..........திருச்செந்துார் முருகன்9. திருப்புகழ் பாடல்களை மக்களிடம் பரப்பிய முருகனடியார்............வள்ளிமலை சுவாமிகள்10. முருகனின் திருநாமத்தை இடைவிடாது ஜபித்த பெண்..........முருகம்மையார்